ஹாரி புரூக் 
கிரிக்கெட்

பாகிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் ஹாரி புரூக்.. 6 இன்னிங்ஸில் 4 சதங்கள்!

பாகிஸ்தானில் ஹாரி புரூக் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

DIN

இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் பாகிஸ்தானில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 97 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணித் தரப்பில் ஜோ ரூட் 172* ரன்களும், ஹாரி புரூக் 132* ரன்களும் எடுத்துள்ளனர்.

இங்கிலாந்து அணியின் ஒருநாள் தொடர் கேப்டனாக இருந்த 25 வயதான ஹாரி புரூக்கிற்கு இது 6-வது சதமாக அமைந்தது.

மேலும், பாகிஸ்தானில் இதுவரை இவர் 6 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக இவருக்கு 4 வது சதமாகவும் பதிவாகியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5-வது சதமாகும் அமைந்தது.

இந்திய வீரர் மொஹிந்தர் அமர்நாத் மற்றும் இலங்கையின் அரவிந்த டி சில்வா ஆகியோருக்குப் பிறகு பாகிஸ்தானில் நான்கு டெஸ்ட் சதங்களை அடித்த மூன்றாவது வெளி நாட்டு வீரர் என்ற பெருமையையும் ஹாரி புரூக் பெற்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஐந்து சதங்கள் அடித்த வீரர்கள்

  • கமிந்து மெண்டிஸ் (இலங்கை) - 5 சதங்கள் (13 இன்னிங்ஸ்)

  • டேரில் மிட்செல் (நியூசிலாந்து) - 5 சதங்கள் (35 இன்னிங்ஸ்)

  • அப்துல்லா ஷபிக் (பாகிஸ்தான்) - 5 சதங்கள் (37 இன்னிங்ஸ்)

  • ஷுப்மன் கில் (இந்தியா) - 5 சதங்கள் (50 இன்னிங்ஸ்)

  • டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 5 சதங்கள் (68 இன்னிங்ஸ்)

  • ஹாரி புரூக் (இங்கிலாந்து) - 5 சதங்கள் (26 இன்னிங்ஸ்)*

பாகிஸ்தானில் அதிக டெஸ்ட் சதம் அடித்த வெளிநாட்டு வீரர்

  • ஹாரி புரூக் (6 இன்னிங்ஸ்)* 

  • மொஹிந்தர் அமர்நாத் (18 இன்னிங்ஸ்) 

  • அரவிந்த டி சில்வா (17 இன்னிங்ஸ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலக்கொடிச் சான்று: தமிழகத்தின் 6 கடற்கரைகள் மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி அமல்

திருமலை மலைப் பாதையில் விநாயக சதுா்த்தி

மாணவா்களுக்கு ரூ.6.10 கோடி கல்விக் கடனுதவி: வேலூா் ஆட்சியா் வழங்கினாா்

செங்கத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம்

SCROLL FOR NEXT