தோனியின் புதிய புகைப்படங்கள். படம்: இன்ஸ்டா / ஆலிம் ஹகிம்
கிரிக்கெட்

சிகையலங்கார நிபுணர் வெளியிட்ட தோனியின் புதிய புகைப்படங்கள்!

பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹகிம் தோனியின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

DIN

கடந்த ஐபிஎல் போட்டியில் தோனி கேப்டன் பொறுப்பினை ருதுராஜுக்கு மாற்றினார். சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பினை இழந்தது.

2023இல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி இந்தமுறை கம்பேக் கொடுக்குமா என காத்திருக்கிறது.

தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமென்பதால் வின்டேஜ் தோனியைப் போலவே தலைமுடியை வளர்த்து வருவதாக கூறியிருந்தார்கள்.

தற்போது, ஐபிஎல் 2025 போட்டியில் தோனி பங்கேற்பாரா எனத் தெரியவில்லை. அவருக்காகவே பிசிசிஐ அன்கேப்ட் வீரர் என்ற புதிய விதிமுறையைக் கொண்டுவந்ததாக ஏபிடி வில்லியர்ஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரபல சிகையலங்கரா நிபுணர் ஆலிம் ஹகிம் தோனியின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படங்களை வெளியிட்டு, “மகேந்திர சிங் தோனி. எங்களின் ஒரேயொரு தல தோனி மட்டுமே” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT