இந்தியாவுக்கு எதிரான பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரிலிருந்து, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் திங்கள்கிழமை விலகினார்.
முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள காயத்துக்காக அவர் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள இருப்பதாகவும், அதிலிருந்து குணமடைந்து முழுமையான உடற்தகுதிபெற 6 மாதங்கள் ஆகலாம் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது அவருக்கான காயத்தின் பாதிப்பு தெரியவந்தது.
இந்த காயத்துக்கான அறுவைச் சிகிச்சை மற்றும் ஓய்வு காரணமாக, பார்டர் - காவஸ்கர் கோப்பை தொடருடன், பிப்ரவரியில் இலங்கை பயணம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி ஆகியவற்றிலும் அவர் பங்கேற்க இயலாது. மேலும், ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்பதும் சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.
தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் இடத்துக்கென பேட்டிங் மற்றும் பெளலரை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இந்தியா "ஏ' அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய "ஏ' அணியிலிருந்து இதற்கான தேர்வு நடைபெறலாம் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.