பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

ஜஸ்பிரித் பும்ராவை அமைதியாக்கும் வழியை கண்டுபிடிக்க வேண்டும்: பாட் கம்மின்ஸ்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ஜஸ்பிரித் பும்ராவை அமைதியாக்கும் வழியை ஆஸ்திரேலிய அணி கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ஜஸ்பிரித் பும்ராவை அமைதியாக்கும் வழியை ஆஸ்திரேலிய அணி கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இடம்பெற்றுள்ள இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

ஜஸ்பிரித் பும்ராவை அமைதியாக்க வேண்டும்

பார்டர் - கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்ல வேண்டுமென்றால், ஜஸ்பிரித் பும்ராவை அமைதியாக்கும் வழியை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ராவின் மிகப் பெரிய ரசிகன் நான். அவர் மிகவும் சிறந்த பந்துவீச்சாளர் என நினைக்கிறேன். அவருக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு அவரை அமைதியாக்க முடிந்தால், பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணியில் உள்ள வீரர்கள் பலரும் ஆஸ்திரேலியாவில் அதிகம் விளையாடியது கிடையாது. இந்த தொடர் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புஜாராவுக்கு புகழாரம்

புஜாராவுக்கு எதிரக விளையாடுவது எப்போதும் சிறப்பானதாக இருக்கும். அவர் தொடர்ச்சியாக விக்கெட்டை இழக்காமல் பேட்டிங் செய்துகொண்டே இருப்பார். அவருக்கு எதிரான போட்டி எனக்கு மிகவும் பிடிக்கும். சில நாள்களில் எனக்கு எதிராக அவர் வெற்றி பெறுவார். சில நாள்களில் அவருக்கு எதிராக நான் வெற்றி பெறுவேன். இத்தனை ஆண்டுகளாக அவருக்கு எதிராக பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இல்லாத டெஸ்ட் தொடர் சற்று வித்தியாசமானதாக இருக்கப் போகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT