சொந்த மண்ணில் சொதப்பும் இந்திய அணி... Shailendra Bhojak
கிரிக்கெட்

55 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமான பேட்டிங்..! சொந்த மண்ணில் சொதப்பும் இந்திய அணி!

பெங்களூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி வருகிறது.

DIN

பெங்களூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி வருகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்கவிருந்த நிலையில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று காலை டாஸ் போடப்பட்ட நிலையில், இந்திய அணி வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

உணவு இடைவேளை வரை 23.5 ஓவரில் இந்திய அணி 34 ரன்களுக்கு 6 விக்கெட்டினை இழந்து தடுமாறிவருகிறது. இதில் 4 பேர் டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த மண்ணில் 1969க்குப் பிறகு 34 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகள் இழப்பது இதுவே முதன்முறை எனபது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி, சர்ஃபராஸ் கான், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா டக் அவுட் ஆனார்கள். ரிஷப் பந்த் 15 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

இந்திய அணியின் ஸ்கோர் கார்டு

ஜெய்ஸ்வால் 13

ரோஹித் சர்மா 2

விராட் கோலி 0

சர்ஃபராஸ் கான் 0

ரிஷப் பந்த் 15*

கே.எல்.ராகுல் 0

ரவீந்திர ஜடேஜா 0

நியூசிலாந்து பந்துவீச்சு

வில்லியம் ரூர்க்கி 3 விக்கெட்டுகள், மாட் ஹென்ரி 2 விக்கெட்டுகள், டிம் சௌதி 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT