பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மா படம் | AP
கிரிக்கெட்

இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தில் மாற்றம் இருக்காது: ரோஹித் சர்மா

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மீண்டு வருவோம்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு சிறப்பாக விளையாடி தொடரைக் கைப்பற்றியது போன்று நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: சில நேரங்களில் இதுபோன்ற ஆட்டங்களை கடந்து வர வேண்டியிருக்கும். தோல்வியிலிருந்து முன்னேறி இந்திய அணி முன்னோக்கிச் செல்லும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியடைந்தது. அதன் பின், தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றினோம்.

முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆட்டமிழப்போம் என எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டு மீண்டு வந்தோம். இரண்டாவது இன்னிங்ஸில் சில பார்ட்னர்ஷிப்புகள் இந்திய அணிக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் விளையாடுகையில் அணி வீரர்கள் இருக்கை நுனிகளில் அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தோம். இளம் வீரர்களான இருவரும் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. சர்ஃபராஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றார்.

அதிரடி ஆட்டத்தில் மாற்றம் இருக்காது

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும் இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தில் மாற்றம் இருக்காது எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு போட்டி சரியாக அமையவில்லை என்பதற்காக, அதிரடியாக விளையாடுவதில் மாற்றம் செய்யப்போவதில்லை. போட்டியில் அச்சமின்றி விளையாடுவதை தொடர்வோம். அண்மையில் நடைபெற்ற சில போட்டிகளில் நாங்கள் அப்படிதான் விளையாடினோம். இனிவரும் போட்டிகளிலும் அதனைத் தொடர்வோம் என்றார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி புணேவில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT