படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வங்கதேச வீரர் சாதனை!

வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி தைஜுல் இஸ்லாம் சாதனை படைத்துள்ளார்.

DIN

வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி தைஜுல் இஸ்லாம் சாதனை படைத்துள்ளார்.

வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று (அக்டோபர் 21) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

சாதனை

தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேசம் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதன் மூலம், தைஜுல் இஸ்லாம் வங்கதேச அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரராக தைஜுல் இஸ்லாம் மாறியுள்ளார். வங்கதேச அணிக்காக தைஜுல் இஸ்லாம் 201 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

வங்கதேசத்துக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள்

ஷகிப் அல் ஹசன் - 246 விக்கெட்டுகள்

தைஜுல் இஸ்லாம் - 201* விக்கெட்டுகள்

மெஹிதி ஹாசன் மிராஸ் - 183 விக்கெட்டுகள்

முகமது ரஃபீக் - 100 விக்கெட்டுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT