முகமது ரிஸ்வான் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

பாகிஸ்தானின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!

பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கான புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கான புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 27) அறிவித்துள்ளது.

முகமது ரிஸ்வான் கேப்டன்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சல்மான் அலி துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் தொடங்குகிறது. நவம்பர் 4 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அணியிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்ட ஷாகின் ஷா அஃப்ரிடி மற்றும் பாபர் அசாம் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

32 வயதாகும் முகமது ரிஸ்வான் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 74 ஒருநாள் மற்றும் 102 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் பாகிஸ்தான் அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 5,401ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்ட மக்கள்! புகைக்குண்டு வீசிய போலீஸ்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்!

டீசல், டியூட், பைசன் - ஒப்பீடு வேண்டாம்! சிலம்பரசன் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்த்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு!

கனடா: நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு!

SCROLL FOR NEXT