கௌதம் கம்பீர்  படம் | கேகேஆர் (எக்ஸ்)
கிரிக்கெட்

எங்கு சென்றாலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் கௌதம் கம்பீர்: ஜாண்டி ரோட்ஸ்

எங்கு சென்றாலும் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் கௌதம் கம்பீர் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

DIN

எங்கு சென்றாலும் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் கௌதம் கம்பீர் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீரின் கீழ் இந்திய அணி மேலும் வலிமையான அணியாக மாறும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். புரோ கிரிக்கெட் லீக் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

ஜாண்டி ரோட்ஸ் (கோப்புப் படம்)

அந்த விழாவில் ஜாண்டி ரோட்ஸ் பேசியதாவது: எங்கு சென்றாலும் கௌதம் கம்பீர் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டபோது, அவர் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை பார்த்தோம்.

அணியின் வெற்றிக்காக பல்வேறு யுக்திகளை முயற்சிப்பவர் கௌதம் கம்பீர். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அவரது தலைமையின் கீழ் இந்திய அணி மேலும் வலிமையான அணியாக மாறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT