படம் | ஐசிசி
கிரிக்கெட்

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு!

ஐசிசியின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி இன்று (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ளது.

DIN

ஐசிசியின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி இன்று (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் மூவரை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை ஐசிசி வழங்கி வருகிறது.

ஆகஸ்ட் மாத போட்டியாளர்கள்

ஐசிசியின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ், மேற்கிந்தியத் தீவுகள் வேகப் பந்துவீச்சாளர் ஜேடன் சீல்ஸ் மற்றும் இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் துனித் வெல்லாலகே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கேசவ் மகாராஜ்

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை தென்னாப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் வென்றுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால், அவர் தற்போது ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய அவர், 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

ஜேடன் சீல்ஸ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், ஜேடன் சீல்ஸ் ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜேடன் சீல்ஸ் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கயானாவில் நடைபெற்ற போட்டியில் மட்டும் அவர் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

துனித் வெல்லாலகே

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட துனித் வெல்லாலகே ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார். இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட துனித் வெல்லாலகேவுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. மூன்று போட்டிகளிலும் துனித் வெல்லாலகே முறையே 67 ரன்கள், 39 ரன்கள் மற்றும் 2 ரன்கள் எடுத்தார். அதேபோல மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் உள்பட துனித் வெல்லாலகே மொத்தமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT