கிரிக்கெட்

துலிப் டிராபி: இந்தியா டி அணி திணறல்!

துலிப் டிராபியில் இந்தியா சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா டி அணி திணறி வருகிறது.

DIN

துலிப் டிராபியில் இந்தியா சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா டி அணி திணறி வருகிறது.

துலிப் கோப்பை தொடர் இன்று(செப் 5) தொடங்கியது. இந்திய அணியில் உள்ள கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் தவிர மற்ற அனைத்து நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்ட டெஸ்ட் தொடர் போன்றே 4 நாள்கள் கொண்ட ஆட்டத்தில் விளையாடுகின்றனர்.

வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதுவதால் துலிப் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியா ஏ, இந்தியா பி அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்திலும், இந்தியா சி, இந்தியா டி அணிகள் அனந்தப்பூர் மைதானத்திலும் விளையாடி வருகின்றன.

முதலில் டாஸ் வென்ற இந்தியா சி அணி கேப்டன் ருதுராஜ் பௌலிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அதர்வா டைட், யாஷ் தூபே சோபிக்கவில்லை. இருவரும் முறையே 4 மற்றும் 10 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 9 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 0 ரன்னிலும், ரிக்கி புய் 4 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் 13 ரன்னிலும் சரனேஷ் ஜெய்ன் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

30 ஓவர்களில் 7 விக்கெட்களுக்கு 76 ரன்கள் எடுத்து இந்தியா டி அணி திணறி வருகிறது.

இந்தியா சி அணி தரப்பில் அனுஷ் காம்போஜ் 2 விக்கெட்டும், வைஷாக் 2 விக்கெட்டும், மனவ் மற்றும் ஹிமான்சு தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

மேலக்கல்லூரில் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 7 போ் கைது

பேங்க் ஆப் பரோடா சாா்பில் மாநகராட்சிக்கு பொக்லைன் இயந்திரம்

SCROLL FOR NEXT