ஆட்ட நாயகன் விருது பெற்ற கைரன் பொல்லார்ட்.  படம்: எக்ஸ் / சிபிஎல் டி20
கிரிக்கெட்

6,0,6,6,6: 37 வயதிலும் அதிரடி காட்டும் கைரன் பொல்லார்ட்! (விடியோ)

சிபிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் பிரபல வீரர் கைரன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி வருகிறார்.

DIN

முன்னாள் மே.இ.தீ. அணி வீரர் கைரன் பொல்லார்டு கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

முதலில் ஆடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் 187 /6 ரன்கள் அடித்தது. இந்த அணிக்கு டு பிளெஸ்ஸி கேப்டனாக இருக்கிறார். 188 ரன்கள் இலக்குடம் விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் வெற்றி பெற்றது.

இந்த அணிக்கு கைரன் பொல்லார்ட் கேப்டனாக இருக்கிறார். 19 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதில் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

கடைசி 12 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்படும்போது 19ஆவது ஓவரை மேத்திவ் போர்ட் வீச வந்தார். அவரது ஓவரில் 0,6,0,6,6,6 என மொத்தம் 24 ரன்கள் அடித்து பொல்லார்ட் அசத்தினார். 37 வயதிலும் அதிரடியாக விளையாடும் பொல்லார்ட்டின் இந்த விடியோ வைரலாகி வருகிறது.

பொல்லார்ட் அணி புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடம் வகித்துள்ளது.

பொல்லார்ட் மும்பை இந்தியன் அணியின் பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT