டிராவிஸ் ஹெட்  படம்: பிடிஐ
கிரிக்கெட்

அதிரடி பேட்டிங்கின் ரகசியம் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் தனது அதிரடி பேட்டிங்கின் ரகசியம் குறித்து பேசியுள்ளார்.

DIN

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் டி20யில் ருத்ர தாண்டவம் ஆடிய டிராவிஸ் ஹெட், சாம் கரன் வீசிய ஓவரில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்து அனைவரையும் வியக்கவைத்தார்.

டிராவிஸ் ஹெட் 23 பந்துகளில் 8 பௌண்டரிகள் , 4 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

ஆட்டநாயகன் விருது வென்ற டிராவிஸ் ஹெட் கூறியதாவது:

அதிரடி பேட்டிங்கின் ரகசியம்

எதிரணியினர் ரன் அடிக்க வாய்ப்பளித்தால், நான் இருக்கிறேன் என வந்து ரன் அடிக்க முயற்சிக்கிறேன். மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் ரன் அடிக்க நினைத்தால் அடிக்கிறேன். கடைசி 12 மாதங்களைத் தவிர்த்து நான் பெரிதாக டி20 கிரிக்கெட் விளையாடிதில்லை.

எனது பேட்டினை எப்படி வீசுகிறேன் என்பதைத் தவிர்த்து எனது விளையாட்டில் நான் அதிகமாக தொழில்நுட்பத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். பந்தினை அடிக்க சரியான இடத்தில் இருந்தால் போதுமானது என நினைக்கிறேன்.

நான் டாப் ஆர்டரில் யாருடன் விளையாடினாலும் (வரனர், ஜேக் பிரேசர் மெக்கர்க், ஸ்மித், ஷார்ட்) அவர்களுடன் எனக்கு நல்ல முறையிலான பழக்கம் இருக்கிறது. ஒருவரை ஒருவர் நாங்கள் பாராட்டிக்கொள்ளுவோம்.

ஷார்ட் சிறப்பாக ஆரம்பித்தார். நான் சிறிது நேரமெடுத்து ஆடினேன். அதிரடியாக ஆடியதால் பின்னால் வரும் வீரர்களுக்கு ஏதுவாக இருந்தது. நான் விளையாடிய விதம் எனக்கு பிடித்திருந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

புதுவை சட்டப்பேரவை இன்று கூடுகிறது

SCROLL FOR NEXT