கிரிக்கெட்

விராட் கோலிக்கு எதிரான சவால்களை மிகவும் விரும்புகிறேன்: மிட்செல் ஸ்டார்க்

விராட் கோலிக்கு எதிரான பந்துவீச்சு சவால்களை மிகவும் விரும்புவதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மனம் திறந்துள்ளார்.

DIN

விராட் கோலிக்கு எதிரான பந்துவீச்சு சவால்களை மிகவும் விரும்புவதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மனம் திறந்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வருகிற நவம்பரில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. பார்டர் - கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்று 10 ஆண்டுகள் ஆவதால், இந்த டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், விராட் கோலிக்கு எதிரான பந்துவீச்சு சவால்களை மிகவும் விரும்புவதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் மிட்செல் ஸ்டார்க் பேசியதாவது: விராட் கோலிக்கு எதிரான பந்துவீச்சு சவால்களை நான் மிகவும் விரும்புகிறேன். ஏனெனில், நாங்கள் இருவரும் எதிரெதிர் அணிகளில் பல முறை விளையாடியிருக்கிறோம். விராட் கோலிக்கு எதிராக எப்போதும் நெருக்கடி அளிக்கும் விதமான பந்துவீச்சை வெளிப்படுத்துவேன். அது ஆரோக்கியமான போட்டி. அவரை ஒரு முறை அல்லது இரண்டு முறை ஆட்டமிழக்கச் செய்வேன். அதேபோல எனது ஓவர்களில் அவர் ரன்கள் குவிப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எங்களுக்குள் எப்போதும் இதுபோன்ற ஆரோக்கியமான போட்டி என்பது இருக்கும். அதனை நாங்கள் இருவரும் விரும்புகிறோம் என்றார்.

ஆஸ்திரேலிய அணி கடைசியாக அதன் சொந்த மண்ணில் கடந்த 2014-15 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 300 கோடி வசூலித்த நரசிம்மா!

முதலீடு ஈர்க்கவா? குடும்ப முதலீடு செய்யவா? - முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

‘ஜனநாயகன்’ Vs ‘தி ராஜா சாப்’ | Cinema Updates | Dinamani Talkies

யோலோ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

மடகாஸ்கர் மண்டை ஓடுகளும் மறக்க முடியாத அம்பிகி வெறியாட்டமும்!

SCROLL FOR NEXT