கிரிக்கெட்

துலிப் கோப்பை: இந்தியா ஏ அணி வெற்றி

துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய ஏ அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய டி அணியை வீழ்த்தியது.

Din

துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய ஏ அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய டி அணியை வீழ்த்தியது.

ஆந்திர மாநிலம், அனந்தபூரில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 290/10 ரன்கை ளயும், டி அணி 183/10 ரன்களையும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 380/3 ரன்களைக் குவித்தது. பிரதம் சிங் 122, திலக் வா்மா 111 ரன்களை சோ்த்தனா்.

பின்னா் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய டி அணி 301/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணி வீரா் ரிக்கி புய் 113 ரன்கள் அடித்தும் பலனில்லை. பௌலிங்கில் ஏ அணி தரப்பில் தனுஷ் 4, ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இறுதியில் டி அணியை 186 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஏ அணி.

பி-சி அணி ஆட்டம் டிரா:

இந்திய பி மற்றும் சி அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய சி அணி 525/10 ரன்களையும், பி அணி 332/10 ரன்களையும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் சி அணி 128/4 ரன்களை எடுத்தது. 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய சி அணி பௌலா் அன்ஷுல் காம்போஜ் ஆட்ட நாயகனாக தோ்வு பெற்றாா்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT