ஆடம் ஸாம்பா (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்காக 100-வது ஒருநாள் போட்டியில் ஆடம் ஸாம்பா!

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா அவரது 100-வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா அவரது 100-வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (செப்டம்பர் 19) தொடங்குகிறது.

100-வது ஒருநாள் போட்டி

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 19) டிரண்ட்பிரிட்ஜில் நடைபெறுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ஆடம் ஸாம்பா விளையாடவுள்ள 100-வது ஒருநாள் போட்டியாகும். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க்கை தவிர்த்து ஆடம் ஸாம்பா மட்டுமே ஆஸ்திரேலியாவுக்காக 100-வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார்.

இதுவரை 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆடம் ஸாம்பா 169 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/35 ஆகும்.

100-வது போட்டி குறித்து...

ஆஸ்திரேலிய அணிக்காக 100-வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது குறித்து ஆடம் ஸாம்பா பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணிக்காக 100-வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்காக இத்தனை போட்டிகளில் விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. 100-வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடன் எனது பெற்றோர், மனைவி, மகன் ஆகியோர் உள்ளனர். அவர்கள் முன்னிலையில் 100-வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT