கமிந்து மெண்டிஸ் சதம் படம்: பிடிஐ
கிரிக்கெட்

கமிந்து மெண்டிஸ் சதம்: முதல்நாள் முடிவில் இலங்கை 302 ரன்கள்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 302 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குசால் மெண்டிஸ் 50, மேத்திவ்ஸ் 36, தினேஷ் சண்டிமால் 30 ரன்களும் எடுத்தார்கள். முதல்நாள் முடிவில் இலங்கை அணி 302/7 ரன்கள் எடுத்தது.

ரமேஷ் மெண்டிஸ் 14 ரன்களுடனும் பிரபாத் ஜெயசூர்யா ரன்களேதுமின்றி முதல்நாள் ஆட்டத்தை நிறைவு செய்தார்கள்.

தடுமாறும் நியூசிலாந்து அணி

நியூசிலாந்து சார்பில் வில்லியம் ரௌர்கே 3 விக்கெட்டுகளும் க்ளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளும் கேப்டன் டிம் சௌதி 1 விக்கெட்டும் எடுத்தார்கள். ரச்சின் ரவீந்திரா விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

விலலியம்சன் இல்லாமல் விளையாடும் நியூசிலாந்து அணி வாழ்வா சாவா நிலையில் இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளை நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் முழுதாக வீழ்த்திவிட்டால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT