அதிரடியாக விளையாடும் அஸ்வின்... படங்கள்: பிடிஐ
கிரிக்கெட்

சேப்பாக்கத்தில் கொளுத்தும் அஸ்வின் அண்ணா..! பிசிசிஐ புகழாரம்!

சென்னையில் நடைபெற்றுவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் அரை சதமடித்துள்ளார்.

DIN

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியினர், 2 டெஸ்ட் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் அரை சதமடித்துள்ளார்.

ஜடேஜா- அஸ்வின் கூட்டணி

144க்கு 6 விக்கெட்டுகள் எடுத்து தடுமாறிய இந்திய அணியை அஸ்வின் - ஜடேஜா இணை தூக்கி நிறுத்திவருகிறது. தனது1 5ஆவது அரைசதத்தை அஸ்வின் நிறைவு செய்துள்ளார். 61 ஓவர் முடிவில் இந்திய அணி 243/6 ரன்கள் எடுத்துள்ளது.

அஸ்வின் - ஜடேஜா

இதில் அஸ்வின் 54* (61 பந்துகளில்), ஜடேஜா 41 (55 பந்துகளில்) ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வருகிறார்கள்.

இது குறித்து பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில், “சேப்பாக்கத்தில் கொளுத்தும் அஸ்வின் அண்ணா தனது அரைசதத்தை நிறைவு செய்துள்ளார். இது அவரது 15ஆவது டெஸ்ட் அரைசதம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

மண்ணின் மைந்தன் அஸ்வின்

சமூக வலைதளங்களில் அஸ்வினை ஆஷ் அண்ணா (Ash anna) என்று அழைப்பது வழக்கம். அஸ்வின் அண்ணா என்பதன் சுருக்கமாக இப்படி ரசிகர்கள் அழைப்பார்கள். இதை பிசிசிஐ பயன்படுத்தியிருப்பது தமிழர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேப்பாக்கம் மண்ணின் மைந்தன் அஸ்வின் நன்றாக விளையாடுவது சென்னை ரசிகர்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT