ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி.  
கிரிக்கெட்

உணவு இடைவேளை: 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!

சென்னையில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

DIN

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியினர், 2 டெஸ்ட் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவின் டாப் ஆர்டர்களான ரோஹித் (6), ஷுப்மன் கில் (0), விராட் கோலி (6) சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.

அசத்தும் இளம் வங்கதேச வீரர்

இந்த 3 முக்கிய விக்கெட்டினையும் வங்கதேசத்தின் 24 வயதாகும் ஹாசன் மஹ்முத் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஹாசன் மஹ்முத் 3 டெஸ்ட்டில் 14 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

தற்போது உணவு இடைவேளைவரை 23 ஓவர்களுக்கு இந்திய அணி 88/3 ரன்கள் எடுத்துள்ளது.

ஜெய்ஸ்வால் 37, ரிஷப் பந்த் 33 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

அசத்தும் வங்கதேச வீரர் ஹாசன் மஹ்முத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT