படம் | AP
கிரிக்கெட்

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 315 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 315 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி டிரண்ட் பிரிட்ஜில் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

315 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். பில் சால்ட் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, வில் ஜாக்ஸ் மற்றும் பென் டக்கெட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். வில் ஜாக்ஸ் 56 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் 5 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் 91 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.

கேப்டன் ஹாரி ப்ரூக் (39 ரன்கள்), ஜேமி ஸ்மித் (23 ரன்கள்), ஜேக்கோப் பெத்தெல் (35 ரன்கள்), லியம் லிவிங்ஸ்டன் (13 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களின் முடிவில் 315 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸாம்பா மற்றும் மார்னஸ் லபுஷேன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டிராவிஸ் ஹெட் 2 விக்கெட்டுகளையும், துவார்ஷூயிஸ் மற்றும் மேத்யூ ஷார்ட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT