தொடரை வென்றது ஆப்கானிஸ்தான். படம்: எக்ஸ் / ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
கிரிக்கெட்

177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..! தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DIN

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 106 ரன்களுக்குள் சுருட்டி ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 311 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 105 ரன்கள் எடுத்தார். அஜ்மதுல்லா 86 ரன்களும் ரஹ்மத் 50 ரன்களும் எடுத்தார்கள்.

அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 34.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெம்பா பவுமா அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றார்.

9 ஓவர்கள் வீசிய ரஷித் கான் 39 பந்துகளில் ரன்கள் ஏதும் கொடுக்காமல் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. தென்னாப்பிரிக்க அணி தனது மோசன்மான கிரிக்கெட்டினை விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT