இங்கிலாந்தின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது (கேபிஇ) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் எனப்படும் விருதில் கேபிஇ என்பது நைட்வுட் என்ற விருதாகும். இங்கிலாந்து அரசு வழங்கும் விருதுகளில் கேபிஇ உயர்ந்த வரிசையில் இருக்கிறது.
கடந்த ஜூலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 42 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட்டில் 709 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
உலக அளவில் முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது.
கிரிக்கெட்டில் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
ஆண்டர்சன் தற்போது முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் லங்காஷயர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதற்கு முன்பாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு ஓபிஇ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.