மைக்கேல் ஸ்லாட்டர்.. 
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லாட்டருக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 55 வயதான மைக்கேல் ஸ்லாட்டர் மீது 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மைக்கேல் ஸ்லாட்டர் ஒரு பெண்ணைத் தொடர்ந்து துன்புறுத்தி தாக்குதல் நடத்திவந்துள்ளார். தாக்கப்பட்ட பெண் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அந்தப் பெண் குயின்ஸ்லாந்தின் நூசா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கடந்த 2023 ஆம் ஆண்டில் இருந்து மைக்கேல் ஸ்லாட்டர் அந்தப் பெண்ணைத் துன்புறுத்தியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சிஎஸ்கே அணி வீரரின் தந்தை காலமானார்!

மைக்கேல் ஸ்லாட்டருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர் விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்லாட்டருக்கு கடந்தாண்டில் ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேலாக காவலில் இருந்துள்ளார்.

ஸ்லாட்டரின் மீதமுள்ள தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் இதுபோன்று மீண்டும் கடுமையான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் சிறைக்குச் செல்வது உறுதிசெய்யப்படும் என்று மாரூச்சிடோர் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் வலது கை ஆட்டக்காரரான ஸ்லாட்டர் ஆஸ்திரேலிய அணிக்காக 1993 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில் 74 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தமிழக வீரரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: ரஷித் கான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பம்மெட்டு மலைச் சாலையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்

சாலையில் தேங்கி வீணாகும் குடிநீா்

விவசாயியைத் தாக்கியவா் மீது வழக்கு

சராசரி மழையளவு 63 சதவீதம் வீழ்ச்சி: காரீப் பருவ சாகுபடி பரப்பு பாதிப்பு!

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT