பாகிஸ்தான் செல்லும் வங்கதேச கிரிக்கெட் அணி.. 
கிரிக்கெட்

17 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச போட்டி! பாகிஸ்தான் செல்லும் வங்கதேச கிரிக்கெட் அணி!

வங்கதேச அணி பாகிஸ்தான் செல்வதைப் பற்றி..

DIN

வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கிறது.

வருகிற மே மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேச அணி விளையாடவிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ஃபைசலாபாத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேசப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்பின் ஒருபகுதியாக கடந்தாண்டு பாகிஸ்தான் சென்றிருந்த வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முழுமையாக தொடரைக் கைப்பற்றியது.

இந்தத் தொடரில் முதலில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அடுத்தாண்டு வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு மொத்தமாக 5 டி20 போட்டிகளில் விளையாட இரண்டு அணி நிர்வாகத்தினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த 5 டி20 போட்டிகளும் மே 25 ஆம் தேதி தொடங்கி ஜூன் 3 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 24 சர்வதேச டெஸ்ட் போட்டிகளை நடத்திய ஃபைசலாபாத் இக்பால் திடலில் 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் சர்வதேசப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டிக்கான அட்டவணை

  • முதலாவது டி20 - மே 25

  • 2-வது டி20 - மே 27

  • 3-வது டி20 - மே 30

  • 4-வது டி20 - ஜூன் 1

  • 5-வது டி20 - ஜூன் 3

இதையும் படிக்க: இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராகும் டிம் சௌதி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி... அங்கிதா சர்மா!

ஏர் சீனா விமானத்தின் கேபினில் திடீர் தீ விபத்து

மழை நின்றது: இந்தியா - ஆஸி. போட்டி 35 ஓவர்களாகக் குறைப்பு!

தம்மா... ராஷ்மிகா மந்தனா!

பாக். - ஆப்கன் மோதலுக்கு முடிவு: சண்டை நிறுத்தம் உடனடியாக அமல்!

SCROLL FOR NEXT