டிம் சௌதி.. 
கிரிக்கெட்

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராகும் டிம் சௌதி!

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராகிறார் டிம் சௌதி.

DIN

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியூசிலாந்து வீரர் டிம் சௌதி நியமிக்கப்படவுள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதியை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக நியமிக்க அந்த அணி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

36 வயதான டிம் சௌதி, கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஏற்கனவே, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அவரது அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டிம் சௌதியும் அவருடன் இணைந்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவுன்டி அணியான லங்காஷயருடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடுவதால், அவர் அணியில் இடம்பெறமாட்டர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடிய டிம் சௌதி, இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 391 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் நியூசிலாந்து அணியின் கேப்டனுமான பிரண்டன் மெக்கல்லம் தவிர, முன்னாள் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜீதன் படேலும் இங்கிலாந்து பயிற்சிக் குழுவில் ஒரு பகுதியாக உள்ளார்.

அடுத்த மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், பின்னர் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராகவும் இங்கிலாந்து அணி விளையாடவிருக்கிறது.

இதையும் படிக்க: சூா்யவன்ஷி: ஜெய்பூரில் கரை கடந்த சூறாவளி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா்சோலை அருகே வாழைத் தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

பேராசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை

காட்டு யானை தாக்கியதில் இரண்டு தோட்டத் தொழிலாளா்கள் உயிரிழப்பு

இளைஞா் தற்கொலை: போலீஸ் விசாரணை

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

SCROLL FOR NEXT