உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் டபிள்யூசிஎல் (லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் ) தொடரில் விளையாடி வருகிறார்கள்.
இந்தத் தொடரில் நேற்று இரவு தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 195/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சர்ஜீல் கான் 76 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 16.5 ஓவர்களில் 197/1 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் 120, ஜேபி டுமினி 50 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
இந்தப் போட்டியில் ஏபிடி வில்லியஸ் பாகிஸ்தான் பந்துவீச்சாளஎர்களை 360 டிகிரியில் சுழன்று சுழன்று அடித்தார். 47 பந்தில் சதம் அடித்தார். மொத்தமாக இவர் 12 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் அடித்தார்.
முதல்முறையாக கோப்பையை வெல்லும் ஏபிடி வில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதும் தொடர்நாயகன் விருதும் வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.