நியூசிலாந்து வீரர்கள் படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

ஜிம்பாப்வேவை 359 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 7) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

மூவர் சதம் விளாசல்; வலுவான முன்னிலை

முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. டெவான் கான்வே 79 ரன்களுடனும், ஜேக்கோப் டஃபி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 8) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜேக்கோப் டஃபி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின், டெவான் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், ஹென்றி நிக்கோல்ஸுடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். களமிறங்கியது முதலே ரச்சின் ரவீந்திரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றி நிக்கோல்ஸ் 245 பந்துகளில் 150 ரன்கள் (15 பவுண்டரிகள்) எடுத்தும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா 139 பந்துகளில் 165 ரன்கள் (21 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தும் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 601 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

அபார இன்னிங்ஸ் வெற்றி

மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக நியூசிலாந்து அணி 476 ரன்கள் முன்னிலையுடன் முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, ஜிம்பாப்வே அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது ஜிம்பாப்வே. ரன்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் ஜிம்பாப்வேவுக்கு இது மிகப் பெரிய தோல்வியாகவும், நியூசிலாந்து அணிக்கு இது மிகப் பெரிய வெற்றியாகவும் அமைந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணியில் நிக் வெல்ச் 71 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் கிரைக் எர்வின் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

நியூசிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸகாரி ஃபோல்க்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மாட் ஹென்றி மற்றும் ஜேக்கோப் டஃபி தலா இரண்டு விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபிஷர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து அணி முழுமையாக வென்றது.

டெவான் கான்வே ஆட்டநாயகனகாவும், மாட் ஹென்றி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நியூசிலாந்து, ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடு முழுவதும் உற்சாகத்துடன் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அகம் நக... நிதி அகர்வால்!

பெண்ணின் உயிரை மாய்த்த போக்குவரத்து நெரிசல்! கணவர் கண்முன்னே துடிதுடித்து பலி!

பேசாத மெளனம்... கோமதி பிரியா!

காஸாவின் விடுதலையே இஸ்ரேலின் இலக்கு! - நெதன்யாகு

SCROLL FOR NEXT