ஜேக்கப் பெத்தேல். 
கிரிக்கெட்

21 வயதில் கேப்டன்..! இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு ‘ஜாக்பாட்’.!

அயர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி கேப்டனாக 21 வயது வீரர் நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அயர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி கேப்டனாக 21 வயதான இளம் வீரர் பெத்தேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் செப்டம்பரில் 17, 19, 21 ஆகிய தேதிகளில் அயர்லாந்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தத் தொடரில் வழக்கமான இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கிற்கு பதிலாக 21 வயதான இளம் வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் அயர்லாந்தில் நடைபெறும் டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜேக்கப் பெத்தேல், சர்வதேச போட்டிக்கான இங்கிலாந்து அணியின் இளம் கேப்டன் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

1889 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வழிநடத்திய மோன்டி பௌடனுக்கு அப்போதைய வயது 23 வயது 144 நாட்களாகும்.

இன்றுவரை சர்வதேச போட்டியில் இங்கிலாந்தை வழிநடத்திய இளைய கேப்டன் என்ற சிறப்பை பெற்றுள்ள நிலையில், இதனை ஜேக்கப் பெத்தேல் முறியடிக்கவிருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் ஜேக்கப் பெத்தேல், இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோர் அணியிலும், வார்விக்‌ஷரின் 2-வது லெவன் அணியிலும் கேப்டனாக இருந்த அனுபவம் பெற்றவர்.

குறைந்த வயதில் இங்கிலாந்து கேப்டன்கள்

  • பெத்தேல் - 21 ஆண்டுகள் 329 நாள்கள்

  • பௌவுடன் - 23 ஆண்டுகள் 144 நாள்கள்

  • ப்ளை - 23 ஆண்டுகள் 292 நாள்கள்

  • அலெய்ஸ்டர் குக் - 24 ஆண்டுகள் 325 நாள்கள்

  • மோர்கன்- 24 ஆண்டுகள் 349 நாள்கள்

  • பிராட் - 25 ஆண்டுகள் 1 நாள்

  • பட்டர் - 25 ஆண்டுகள் 80 நாள்கள்

இங்கிலாந்து அணி விவரம்

ஜேக்கப் பெத்தேல் (கேப்டன்), ரெஹான் அகமது, சோனி பேக்கர், டாம் பான்டன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), லியாம் டாசன், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், பில் சால்ட், லூக் வுட்.

Jacob Bethell is set to become the youngest England men's captain

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!

காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு

தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

SCROLL FOR NEXT