விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியினர். 
கிரிக்கெட்

டிராவிஸ் ஹெட் சுழலில் சிக்கிய தெ.ஆ..! மார்க்ரம் அரைசதம்: ஆஸி.க்கு 297 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 296 ரன்கள் குவித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 296 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இழந்த நிலையில் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது.

இவ்விரு அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி கெய்ர்ன்ஸில், கசாலிஸ் திடலில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்கள் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கெல்டான் இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவித்தனர். அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்தார். டெம்பா பவுமா 65 ரன்களும், மேத்யூ 57 ரன்களும் ரியான் ரிக்கெல்டான் 33 ரன்களும் வியான் முல்டர் 31 ரன்களும் குவித்தனர்.

அறிமுகப் போட்டியில் அதிரடி துவக்கம் தந்த டெவால்டு பிரேவிஸ் சிக்ஸருடன் ரன் கணக்கைத் துவங்கினாலும், அடுத்தப் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

பிரதான பந்து வீச்சாளர்களே விக்கெட் எடுக்கத் திணறினாலும், பகுதி நேர பந்துவீச்சாளர் டிராவிஸ் ஹெட் தென்னாப்பிரிக்க வீரர்களை சுழலில் சிக்கித் திணறடித்தார். ஒரு ரன் அவுட்டும் எடுத்து அசத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளும், துவார்ஷுயஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய அணி 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

Travis Head caught in the spin of South Africa! Markram's half-century: Aussies set a target of 297

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்ட நாயகனான கேசவ் மகாராஜ்: 98 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி!

ஹ்ம்ம்ம்... அனஸ்வரா ராஜன்!

சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ரெஜினா!

34 நாள்களில் 100 தொகுதிகள்... இபிஎஸ்ஸின் சுற்றுப்பயணம்!

கீழே விழுந்தால் சேதமாகாது, அதிக பேட்டரி: அறிமுகமாகிறது ரெட்மி நோட் 15 பிளஸ்!

SCROLL FOR NEXT