ஷுப்மன் கில் (படம் | AP)
கிரிக்கெட்

ஆசிய கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் தேவையா.? தமிழக முன்னாள் வீரர் கேள்வி

ஆசியக் கோப்பை அணித் தேர்வில் ஷுப்மன் கில்லை திடீரென தேர்வு செய்யப்பட வேண்டியது ஏன்? என தமிழக முன்னாள் வீரர் கேள்வியெழுப்பியுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆசியக் கோப்பை அணித் தேர்வில் ஷுப்மன் கில்லை திடீரென தேர்வு செய்யப்பட வேண்டியது ஏன்? என தமிழக முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்குகிறது.

ஆசியக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 பேர் கொண்ட அணி செவ்வாய்க்கிழமை(ஆக. 19) அறிவிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகின.

இந்தத் தொடருக்கான அணியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லை தேர்வு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், அவர் சஞ்சு சாம்சன் அல்லது அபிஷேக் சர்மாவை கலட்டிவிட்டு ஷுப்மன் கில் தேர்வு செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியானது.

இந்த நிலையில், இந்தத் தொடருக்கான அணித் தேர்வின் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட வேண்டும் என கருத்துக்கு முதல்முறை உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜாம்பவானும், பிசிசிஐ முன்னாள் அணித் தேர்வருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது யூடியூப் தளத்தில் பேசுகையில், “ஷுப்மன் கில் டி20 அணியின் கேப்டனாக இருந்திருந்தால் நேரடியாக இந்திய அணியில் இருந்திருப்பார்.

அவர் தொடக்க ஆட்டக்காரராக இருந்தால், சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது வைபவ் சூர்யவன்ஷி யாரும் அணியில் இருக்க மாட்டார்கள்.

கில் உடனடியாக தொடக்க வீரராக களமிறங்கியிருப்பார். ஆனால், கில் டி20 உலகக் கோப்பை தொடரிலேயே அவர் பங்கேற்கவில்லை. அவர் திடீரென்று ஏன் இங்கே வருகிறார்?.

அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நன்றாக விளையாடினார். ஆனால், டி20 தொடரில் விளையாடவில்லை. எதனடிப்படையில் அவரை அணியில் தேர்வு செய்யமுடியும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக விளையாடிவரும் கில், தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும், 2022 ஆம் ஆண்டில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில், 17 இன்னிங்ஸ்களில் 890 ரன்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் வென்றிருந்தார்.

ஷுப்மன் கில் இதுவரை 21 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 139.27 ஸ்ட்ரைக் ரேட்டில் 578 ரன்களைக் குவித்துள்ளார். மூன்று விதமான சர்வதேச போட்டிகளிலும் சதம் விளாசிய இந்திய வீரர்களில் ஒருவராகவும் அவர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘Where does Shubman Gill come in suddenly?’: Kris Srikkanth against India Test captain's selection in Asia Cup squad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

NDA எம்.பி.க்கள் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வாழ்த்திய பிரதமர்!

திருப்பதி கோயிலுக்கு ரூ.140 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்கம் வழங்கிய பக்தர்!

காளையின் ஆதிக்கம்: தொடர்ந்து ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

ஆட்ட நாயகனான கேசவ் மகாராஜ்: 98 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி!

ஹ்ம்ம்ம்... அனஸ்வரா ராஜன்!

SCROLL FOR NEXT