ஆசிய கோப்பைக்கான 16 நபர்கள் கொண்ட வங்கதேச அணி டி20 அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச அணியை பிசிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ஆசிய கோப்பை அடுத்தாண்டு வரும் டி20 உலகக் கோப்பைக்கு முக்கியம் என்பதால் அனைத்து நாடுகளும் கவனமாக அணியை தேர்ந்தெடுத்து வருகின்றன.
இலங்கையுடன் முதன்முதலாக டி20 அணியை வழிநடத்திய லிட்டன் தாஸ் சிறப்பாக செயல்பட்டதால் அவரது தலைமையிலேயே ஆசிய கோப்பை அணியும் தேர்வாகியுள்ளது.
முன்னாள் டி20 கேப்டன் நஜ்முல் ஹொசைனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் மெஹதி ஹசன் மிஸ்ராவும் தேர்வாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சௌம்யா சர்கார், தன்வீர் இஸ்லாம், ஹாசன் மஹ்முத் ஆகியோர் தயார்நிலை வீரர்களாக மட்டுமே தேர்வாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச அணி: லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைஃப் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், ஜாக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன் சோஹன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், டான்சிம், ஷோஃபுல் இஸ்லாம் உதின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.