ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் தனது சொந்த சாதனையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.
தொடர்ச்சியாக 21 முறை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துவந்த மிட்செல் மார்ஷ் தற்போது முதல்முறையாக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
பாட் கம்மின்ஸ் தற்காலிக ஓய்வில் இருப்பதால் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இதுவரை, 21 முறையாக கேப்டனாக டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தவர். இன்று முதல்முறையாக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதன்மூலம் அவரது தொடர்ச்சியான சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
டி20 தொடரை வென்ற ஆஸி. ஒருநாள் தொடரை இழந்துள்ளது. கடைசி ஒருநாளில் 105 ரன்களுடன் பேட்டிங் செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.