விரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவிர் சேவாக் தில்லி பிரீமியர் லீக்கில் அறிமுகமாகியுள்ளார்.
அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிரடியாக 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
விரேந்திர சேவாக்கின் மூத்த மகன் ஆர்யவிர் சேவாக் (17) தில்லி பிரீமியர் லீக்கில் களமிறங்கியுள்ளார்.
சென்ட்ரல் தில்லி கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ஆர்யவிர் சேவாக் நவ்தீப் சைனி ஓவரில் முதலிரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார்.
பின்னர், 16 பந்துகளில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சென்ட்ரல் தில்லி 155/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஈஸ்ட் தில்லி ரைடர்ஸ் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.
சமீபத்தில் ஆர்யவிர் சேவாக் கூச் பெஹர் டிராபி தொடரில் 297 ரன்கள் (309 பந்துகள்) குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.