இங்கிலாந்தில் விளையாடிவரும் சாம் கரண் சிறப்பாக விளையாடுவதால் சிஎஸ்கே அணி வாழ்த்தியுள்ளது.
இதற்காக சாம் கரணுக்குச் சிறப்புப் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் சாம் கரண் (27) சிஎஸ்கே அணியில் விளையாடுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரசிகர்களால் சுட்டிக் குழந்தை என அன்போடு அழைக்கப்படுகிறார்.
கடந்த சீசனில் ரூ.2.4 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. சில போட்டிகளில் அற்புதமாக விளையாடினார்.
இந்நிலையில், தி ஹன்ட்ரட் தொடரில் விளையாடும் சாம் கரண் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தி வருகிறார்.
குறிப்பாக பேட்டிங்கில் 34 (19), 50 (32), 54 (24) , 30 (19), 27 (13) என அதிரடியாக விளையாடுகிறார்.
இதற்காக சிஎஸ்கே தனது சமூக வலைதள பக்கத்தில், “தனது நூறு சதவிகித்தையும் அளிக்கிறார்” எனக் குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.