இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக செப்.4ஆம் தேதியே துபைக்குச் செல்லவிருப்பதாக பிசிசிஐ-இன் மூத்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
துபையில் வருகிற செப்.9ஆம் தேதி ஆடவருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன.
சூர்யகுமார் தலைமையில் 15 பேர்கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதது மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது.
துபை செல்வதற்கு முன்பாக அனைத்து வீரர்களும் மும்பையில் ஒன்றுகூடுவதாகக் கூறப்பட்டுள்ளது. பயணத்தை எளிமையாக்க இப்படி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் போட்டி செப்.10ஆம் தேதி யுஏஇ உடனும் செப்.14-இல் பாகிஸ்தானுடம் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.
செப்.4இல் துபைக்கு வரும் வீரர்கள் செப்.5-இல் வலைப் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய அணி விவரம்
சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் சிங் ராணா, ரிங்கு சிங்.
ஆசிய கோப்பை 2023-இல் இந்திய அணி இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில்தான் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.