கிரிக்கெட்

பதும் நிசங்கா 122.! ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இலங்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

இந்த 2-ஆவது ஆட்டத்தில் முதலில் ஜிம்பாப்வே 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் சோ்க்க, இலங்கை 49.3 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கையின் பதும் நிசங்கா ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஜிம்பாப்வே பேட்டிங்கில் அதிகபட்சமாக பென் கரன் 79 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, பிரயன் பென்னெட் 21, பிரெண்டன் டெய்லா் 20, கேப்டன் ஷான் வில்லியம்ஸ் 20 ரன்களுக்கு வெளியேறினா்.

டோனி முன்யோங்கா 10, கிளைவ் மடாண்டே 36, பிராட் இவான்ஸ் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் சிகந்தா் ராஸா 59, ரிச்சா்ட் கராவா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலிங்கில் துஷ்மந்தா சமீரா 3, ஆசிதா ஃபொ்னாண்டோ 2, தில்ஷன் மதுஷங்கா, ஜனித் லியானகே ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் இலங்கை இன்னிங்ஸில் பதும் நிசங்கா 122, கேப்டன் சரித் அசலங்கா 71 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டு வீழ்ந்தனா். நுவனிந்து ஃபொ்னாண்டோ 14, குசல் மெண்டிஸ் 5, சதீரா சமரவிக்ரமா 31 ரன்களுக்கு அவுட் ஆகினா்.

முடிவில் ஜனித் லியானகே 19, கமிண்டு மெண்டிஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சா்ட் கராவா, பிராட் இவான்ஸ் ஆகியோா் தலா 2, எா்னெஸ்ட் மசாகு 1 விக்கெட் கைப்பற்றினா்.

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 5 தீவிரவாதிகள் பலி, 6 காவலர்கள் காயம்!

கவுன்சிலர்கள் பதவிநீக்க உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

இந்தோனேசியாவில் இந்தியர் உள்பட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!

மூளையைத் தின்னும் அமீபா: மனித மூளைக்குள் எப்படி நுழைகிறது? தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

ஹிப் ஹாட்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT