மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷாய் ஹோப் ஆட்டமிழந்த விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரீபியன் பிரீமியர் லீக்கில் வைட் பந்தை அடிக்கச் செல்லும்போது ஸ்டம்பில் பேட் பட்டு வித்தியாசமாக ஹிட் - விக்கெட் ஆனார்.
மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக்கில் முதலில் விளையாடிய அமேசான் வாரியர்ஸ் 20 ஓவர்களுக்கு 163 / 9 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய டிகேஆர் 17.2 ஓவர்களில் 169/4 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் அமேசான் வாரியர்ஸ் அணியின் ஷாய் ஹோப் 13 ஓவது ஓவரின் கடைசி பந்தில் வைடாகச் சென்ற பந்தை ரிவர்ஸ் ஸ்விப் ஆட முயன்று ஹிட் விக்கெட்டானார்.
”இப்படியுமா ஆட்டமிழப்பது...?” என இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அமேசான் வாரியர்ஸ் அணிக்கு அதிகபட்சமான (39 ரன்கள்) ரன் எடுத்திருக்கும்போது ஆட்டமிழந்தது ஆட்டத்தையே மாற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.