ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சனை முந்தியுள்ளார்.
அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் பாட் கம்மின்ஸ் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அடிலெய்டு டெஸ்ட்டில் நான்காம் நாளில் இங்கிலாந்து அணி 207 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளார்கள்.
இந்தப் போட்டியில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதன்மூலம், டெஸ்ட்டில் 315 விக்கெட்டுகளுடன் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸி. வெற்றிபெற 4 விக்கெட்டும் இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்களும் தேவையாக இருக்கிறது.
கேப்டனாகவும் பாட் கம்மின்ஸ் இன்னொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆஸி. வீரர்கள்
1. ஷேன் வார்னே - 708
2. நாதன் லயன் - 567
3. க்ளென் மெக்ராத் - 563
4. மிட்செல் ஸ்டார்க் - 421
5. டென்னிஸ் லில்லி - 355
6. பாட் கம்மின்ஸ் - 315
7. மிட்செல் ஜான்சன் - 313
8.பிரெட் லீ - 310
கேப்டனாக கம்மின்ஸ் செய்தது என்ன?
கேப்டனாக இருந்து 150 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் கம்மின்ஸுக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
முதலிரண்டு ஆஷஸ் டெஸ்ட்டில் விளையாடாமல் இருந்த கம்மின்ஸ், அடிலெய்டு டெஸ்ட்டில் அசத்தி வருகிறார்.
கூடுதலாக 38 விக்கெடுகள் எடுத்தால் கேப்டனாக கம்மின்ஸ் புதிய வரலாறு படைப்பார் என்பதும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.