நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஒரே போட்டியில் இரட்டைச் சதம், சதம் விளாசிய முதல் நியூசிலாந்தில் முதல் வீரராக கான்வே சாதனை படைத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 575/8 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
மே.இ.தீ. அணி 420க்கு ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 54 ஓவர்களில் 306/2 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
நான்காம் நாள் முடிவில், தனது இரண்டாம் இன்னிங்ஸில் மே.இ.தீ.அணி 16 ஓவர்களில் 43/0 ரன்கள் எடுத்துள்ளது. இந்த அணி வெல்ல 419 ரன்கள் தேவையாக இருக்கிறது.
இந்தப் போட்டியில் டெவான் கான்வே முதல் இன்னிங்ஸில் 227 ரன்களும் இரண்டாம் இன்னிங்ஸில் 100 ரன்களும் எடுத்தார்.
34 வயதாகும் டெவான் கான்வே ஒரே டெஸ்ட்டில் இரட்டைச் சதம், சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரராக இருக்கிறார்.
இதற்கு முன்பாக பலரும் இந்தச் சாதனை நிகழ்த்தியுள்ளார்கள். உலக அளவில் 10-ஆவது வீரராக இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் பிரையல் லாரா, கிரஹாம் கூச், குமார் சங்ககாரா, சுனில் கவாஸ்கர், மார்னஸ் லபுஷேன், ஷுப்மன் கில் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிப்பதால் இந்தப் போட்டி சமனில் முடிந்தாலும் தொடரை வெல்லுமென்பது கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.