இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே 39 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஹர்ஷிதா மாதவி 21 ரன்களும், ஹாசினி பெரேரா 20 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சமாரி அத்தப்பத்து 15 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் கிராந்தி கௌட், தீப்தி சர்மா மற்றும் ஸ்ரீ சரணி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.