இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை இழந்ததை புரிந்துகொள்ள மிகவும் கடினமாக இருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 எனக் கைப்பற்றியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரர்கள் பலர் இல்லாதபோதிலும், இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை இழந்திருப்பதை புரிந்துகொள்ள மிகவும் கடினமாக இருப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்த தோல்வியை புரிந்துகொள்ள மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில், ஆஸ்திரேலிய அணியில் சில போட்டிகளில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இல்லை. மூன்று போட்டிகளிலும் பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட் அணியில் இல்லை. அப்படி இருந்தும், இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை இழந்துள்ளதை புரிந்துகொள்ள மிகவும் கடினமாக இருக்கிறது.
இன்று காலையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதை பார்த்ததும், நான் ஏற்கனவே பதிவிட்ட ட்வீட்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. இதற்கு பிறகு பேட்டர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு மாற மாட்டார்கள் என்ற என்னுடைய பழைய பதிவு நினைவுக்கு வந்தது எனப் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி முதல் மெல்போர்னில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.