நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
40 ஆண்டுகலாக இருந்துவந்த முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹாட்லீயின் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஜேக்கப் டஃபி 9 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இந்தத் தொடரில் மட்டும் அவர் 23 விக்கெட்டுகள் எடுத்து தொடர் நாயகன் விருது பெற்றார்.
இந்த அபாரமான பந்துவீச்சின் மூலம் நியூசிலாந்து டெஸ்ட் அணிகளின் வரலாற்றில் ஓர் ஆண்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதன்மூலம் 40 ஆண்டுகலாக இருந்துவந்த முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹாட்லீயின் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
ஓர் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த நியூசி. வீரர்கள்
1. ஜேக்கப் டஃபி - 81 (2025)
2. ரிச்சர்ட் ஹாட்லீ - 79 (1985)
3. டேனியல் வெட்டோரி - 76 (2008)
4. டிரெண்ட் போல்ட் - 72 (2015)
5. டிரெண்ட் போல்ட் - 69 (2017)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.