இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது ரசிகையான காஷ்மீர் சிறுமிக்கு அளித்துள்ள பதில் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
திரைப்பட இயக்குநர் கபீர்கானின் இன்ஸ்டா பதிவில் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பதிலளித்துள்ளார்.
ஸ்மிருதியின் ரசிகை காஷ்மீர் சிறுமி
பிரபல திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் கபீர் கான் தனது இன்ஸ்டா பக்கத்தில் காஷ்மீர் சென்ற அனுபவம் குறித்து புகைப்படங்களைப் பதிவிட்டு எழுதி இருந்தார். அதில் அவர் கூறியதாவது:
காஷ்மீரில் என்னுடைய காமிராவுடன் நடக்கும்போது எப்போதும் எனக்கு அற்புத கணங்கள் கிடைக்கின்றன. அருவில் இருந்த ஒரு சிறுமி என்னிடம் தான் ஸ்மிருதி மந்தனாவின் மிகப்பெரிய ரசிகை எனக் கூறுமாறு தெரிவித்தார்.
ஸ்மிருதி இந்தப் பதிவினைப் பார்ப்பார் என நினைக்கிறேன். மலையடிவாரத்தில் விளையாடும் சிறுவர்களுக்கு அந்த நதிதான் எல்லைக் கோடாக இருக்கிறது. சிக்ஸர் அடித்தால் அந்தப் பந்து பள்ளத்தாக்கில் விழுந்து ஜூலம் நதியில் சேரும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்மிருதி மந்தனாவின் பதில்
இந்தப் பதிவுக்கு வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, “என் சார்பாக அந்தச் சிறிய வீராங்கனைக்கு என்னுடைய பெரிய தழுவலைத் தாருங்கள். அத்துடன் நானும் அவளுக்காக சியர்ஸ் சொல்கிறேன்” என கமெண்ட் செய்திருந்தார்.
இந்தப் பதிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டியில் ஸ்மிருதி 25 ரன்கள் எடுத்தார். சமீபத்தில் அவரது திருமணம் நிறுத்தப்பட்டு, மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.