ஐசிசியின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 4 ஓவர்களை வீசிய அவர் வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், ஐசிசியின் டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் அன்னாபெல் சதர்லேண்டை பின்னுக்குத் தள்ளி தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
737 ரேட்டிங் புள்ளிகளுடன் தீப்தி சர்மா தரவரிசையில் முதலிடத்தில் இருக்க, அன்னாபெல் சதர்லேண்ட் 736 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் வீராங்கனை சதியா இக்பால், இங்கிலாந்து வீராங்கனைகளான சோஃபி எக்கல்ஸ்டோன் மற்றும் லாரன் பெல் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே உள்ளனர்.
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அருந்ததி ரெட்டி 5 இடங்கள் முன்னேறி 36-வது இடம் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்ரீ சரணி 19 இடங்கள் முன்னேறி 69-வது இடம் பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.