ஆஷஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியைப் பெற்று வரலாறு படைத்துள்ளது.
மெல்போர்னில் நடைபெற்றுவந்த நான்காவது ஆஷஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாக்ஸிங்டே டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து 110க்கு ஆட்டமிழந்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸி. 132க்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து அணி 178/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 2011க்குப் பிறகு முதல்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ளது.
இருப்பினும் இங்கிலாந்து அணி 3-1 தொடரை இழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.