ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஷஸ் தொடரை இழந்தபோதிலும், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி ஆறுதலளிப்பதாக இருக்கக் கூடும்.
இந்த நிலையில், 50 அல்லது 60 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருப்போம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் சீக்கிரமாக நிறைவடைந்துவிட்டது. இந்தப் போட்டியில் நாங்கள் 50 அல்லது 60 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால், போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கும். இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே மிகவும் அதிரடியாக விளையாடியதால், பந்தின் தன்மை மென்மையாக மாறியது. அதனால், ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இல்லை. ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக மாறியது என்றார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற ஜனவரி 4 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.