எஸ்ஏ20 கிரிக்கெட்டில் பார்ல் ராயல்ஸ் அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பார்ல் ராயல்ஸ் அணி இந்த சீசனில் முதல் போட்டியிலேயே இப்படியான மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 186/ 4 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜோர்டன் எர்மன் 62, குயிண்டன் டி காக் 42 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்து பேட்டிங் செய்த ராயல்ஸ் அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த அணியில் அதிகபட்சமாக அசா டிரைப் 14 ரன்கள் எடுத்தார்.
சன்ரைசர்ஸ் சார்பில் நோர்க்கியா 4, ஆடம் மில்னே, தரிந்து ரத்நாயக்க தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
எஸ்ஏ20 வரலாற்றில் மிகக் குறைவான ரன்களை எடுத்து பார்ல் ராயல்ஸ் மோசமான சாதனை படைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.