படம் | மகளிர் பிரீமியர் லீக் (எக்ஸ்)
கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்கள்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீராங்கனைகளான எல்லிஸ் பெரி மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீராங்கனைகளான எல்லிஸ் பெரி மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர்.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 4-வது சீசன் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர்களான எல்லிஸ் பெரி மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர்.

எல்லிஸ் பெரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும், அன்னாபெல் சதர்லேண்ட் தில்லி கேபிடல்ஸ் அணிக்காகவும் அடுத்த சீசனில் விளையாடவிருந்த நிலையில், தற்போது இருவரும் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

எல்லிஸ் பெரிக்குப் பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சயாலி சத்கரேவும், அன்னாபெல் சதர்லேண்டுக்குப் பதிலாக தில்லி கேபிடல்ஸ் அணியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அலானா கிங்கும் விளையாடுவார்கள் என மகளிர் பிரீமியர் லீக் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 4-வது சீசன் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Australian players Ellyse Perry and Annabel Sutherland have withdrawn from the Women's Premier League tournament due to personal reasons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“நவம்பரில் VIJAY கண்டிப்பாக திரும்ப நடிக்க வருவார்!” நடிகை சிந்தியா பேட்டி

சொர்க்கவாசல் திறப்பு - புகைப்படங்கள்

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா எப்போது? ஜீ தமிழ் அறிவிப்பு!

திமுக என்ஜின் இல்லாத கார்: கூட்டணி எனும் லாரியே கட்டி இழுக்கிறது - இபிஎஸ்

இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக லசித் மலிங்கா நியமனம்!

SCROLL FOR NEXT