டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 257 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிக்கிறது: ரிக்கி பாண்டிங்
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி சதம் விளாசி அசத்தினர். ஸ்டீவ் ஸ்மித் 120 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ராகுல் டிராவிட், ஜோ ரூட் சாதனை சமன்
இலங்கைக்கு எதிரான போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசியது டெஸ்ட் போட்டிகளில் அவரது 36-வது சதமாகும். இந்த சதத்தின் மூலம், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்துள்ளார்.
ராகுல் டிராவிட் மற்றும் ஜோ ரூட் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்கள் விளாசியுள்ளனர். அவர்களது சாதனையை ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய 5-வது வீரர் என்ற சாதனையை ராகுல் டிராவிட் மற்றும் ஜோ ரூட்டுடன் ஸ்டீவ் ஸ்மித் பகிர்ந்து கொண்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் விளாசி சச்சின் டெண்டுல்கர் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஜாக் காலிஸ் (45 சதங்கள்), ரிக்கி பாண்டிங் (41 சதங்கள்), குமார் சங்ககாரா (38 சதங்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.