இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 414 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை-ஆஸி.க்கு இடையே 2ஆவது டெஸ்ட் போட்டி பிப்.6இல் காலே திடலில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 257க்கு ஆல் அவுட்டானது.
இரண்டாம் நாளில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி. அணி 3ஆம் நாள் உணவு இடைவேளை வரை விளையாடி 106.4 ஓவர்களில் 414 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி 157 ரன்கள் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிஷன் பெரிஸ் 3, ரமேஷ் மெண்டிஸ் 2 விக்கெட்டுகளும் எடுத்து உதவினார்கள்.
ஆஸி. முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் கார்டு
டிராவிஸ் ஹெட் - 21
உஸ்மான் கவாஜா - 36
மார்னஸ் லபுஷேன் - 4
ஸ்டீவ் ஸ்மித் -131
அலெக்ஸ் கேரி - 156
ஜோஷ் இங்லிஷ் - 0
பியூ வெப்ஸ்டர் - 31
கூப்பர் கோனோலி - 4
மிட்செல் ஸ்டார்க் - 8
நாதன் லயன் - 2*
மேத்திவ் குன்னஹ்மேன் -6
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.